எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கம்மன்பிலவின் வௌிப்படுத்தல்…!!
மின்சார சபைக்கான எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பின்னர் சுமார் ஒரு மாத காலம் தாமதமாகலாம் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு இல்லாததே இந்த நிலைக்கு காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பில் எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவைக்கு விளக்கமளிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான பணத்தை விரைவில் பெற்றுக்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்கிழமை கூடவுள்ள அமைச்சரவைக்கு அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில் மின்சார சபையின் தேவைக்கு ஏற்ற வகையில் எரிபொருள் விநியோகம் செய்ய முடியாது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.