21/4 விசாரணையில் நம்பிக்கை இல்லை !!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் (21/4) தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் நம்பிக்கை இல்லையெனவும், அவ்விசாரணையில் எவ்விதமான நம்பிக்கையையும் கொள்ளமுடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பொரளையிலுள்ள தேவாலய வளாகத்தில் இருந்து கைக்குண்டொன்று அண்மையில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் தன்மையை பார்க்குமிடத்து அந்த சந்தேகம் இன்னுமின்னும் வலுப்பெற்றுள்ளது என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மஸ்கெலியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணை குறித்து சமூகத்தில் கடும் சந்தேகம் உருவாகியுள்ளது. சந்தேகத்துக்கு இடமான முறையில் அரசாங்கம் நடந்துகொள்வது மற்றும் விசாரணைகளில் ஏற்பட்டிக்கும் தாமதம் இவற்றின் ஊடாக அவை நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.