கத்தோலிக்க, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் இல்லை !!
ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இரண்டாவது கூட்டத்தொடர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்று (18) காலை 10 மணிக்கு சம்பிரதாகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதில், அழைக்கப்பட்ட மதத் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
பௌத்த தேரர்கள் 16 பேர், இந்து மதகுருமார் ஒருவர், இஸ்லாமிய மதத் தலைவர்கள் இருவர் பங்கேற்றிருந்தனர். கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் எவரும் சமூகமளித்திருக்கவில்லை.
கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா? அல்லது அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் புறக்கணித்துவிட்டார்களா? என்பது தொடர்பில் இதுவரைக்கும் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை.