பஞ்சாப் மாநில தேர்தல்- முதல்வர் வேட்பாளரை அறிவித்தார் கெஜ்ரிவால்…!!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெறும். இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., ஆம் ஆத்மி, அகாலிதளம் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரி வேட்பாளராக பகவந்த் மன் நிறுத்தப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான பகவந்த் மன், மக்களின் அமோக ஆதரவை பெற்றவர் என கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
போன் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட வாக்குகளில் 93 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பகவந்த் மான் பெற்றுள்ளார், எனவே, பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்பது தெளிவாகிறது என்றார் கெஜ்ரிவால்.