மின் உற்பத்தி பணிகள் முற்றாக நிறுத்தம்!!

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இன்று (19) மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஜெனரேட்டர்களுக்கு தேவையான எரிபொருளை இன்று மாலைக்குள் விநியோகிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.