சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.
சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகளுக்கும் தற்போது கொரோனா பரவியுள்ளது. சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஏற்கனவே 2 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் தற்போது குணம் அடைந்துவிட்டனர்.
இந்த நிலையில் மேலும் 8 நீதிபதிகளுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.
அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 1,500 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் மொத்தம் 400 பேருக்கு கொரோனாவின் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதில் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் உள்ள மருத்துவ சேவை மையத்திலும் 5 டாக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீதிபதிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது.