யாழ் – மானிப்பாய் பொதுச் சந்தையில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கை !! (படங்கள், வீடியோ)
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொதுச் சந்தையில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, டெங்கு ஒழிப்பு சம்பந்தமான வீதி நாடகமும் நடாத்தப்பட்டது.
பின்னர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டதோடு சந்தையைச் சுற்றிய வளாகமும் சுத்தப்படுத்தப்பட்டது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபனேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, சிறப்பு அதிதிகளாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன், யாழ்ப்பாண பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மு.சுலோச்சனா, சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிந்துஷா, வலிகாமம் தென்மேற்கு சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”