கொரோனாவின் புதிய மாறுபாடு அடையாளம் !!

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஒமிக்ரான் வைரஸில் இருந்து உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒமிக்ரான் வைரஸின் துணை திரிபான பிஏ-2 வைரஸ் கண்டறியப்பட்டது.
அது பரவத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே ஒமிக்ரானின் புதிய துணை மாறுபாடான பிஏ-2 வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாறுபாடு தொடர்பாக இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிஏ-2 வைரஸ் டென்மார்க்கில் அதிகமாக பரவி இருப்பதாகவும் அதேபோல் நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளிலும் பரவி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸ் மற்றும் இந்தியாவிலும் ஒமிக்ரானின் புதிய மாறுபாடு விரைவில் பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவலின்படி ஒமிக்ரான் மாறுபாடு மூன்று துணை திரிபுகளை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.