உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக சார்பில் 66 சதவீதம் சிறுபான்மை சமூகத்தினர் போட்டி – யோகி ஆதித்யநாத் தகவல்…!!

உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்நிலையில் லக்னோ மற்றும் புலந்த்ஷாஹர் பகுதிகளில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
பா.ஜ.க.தனது 66 சதவீத டிக்கெட்டுகளை சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வழங்குவதால், பாஜக அரசு மூலம் மட்டுமல்ல, வேட்பாளர்கள் மூலமாகவும் சமூக நீதியை நிலைநாட்டி உள்ளது. மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் பாஜகவின் இரட்டை எஞ்ஜின் ஆட்சி, தான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது.
2017க்கு முன் வணிகர்களும், பொதுமக்களும் மாநிலத்தை விட்டு புலம் பெயர்ந்தனர். 2017க்குப் பிறகு குற்றவாளிகள் புலம் பெயர்ந்துள்ளனர். மாநிலத்தின் 25 கோடி மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதற்கான புதிய முன்னுதாரணத்தை அரசு அமைத்து வருகிறது. இது நம் அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.