ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!
நெற்செய்கை மேற்கொள்ள முடியாத பயிர்நிலங்களில் பாசிப்பயிரை மேலதிக பயிராக பயிரிடுவதற்கு அரசாங்கம் உதவ உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கான கண்காணிப்பு விஜயத்தின்போது கிடைத்த தகவல்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
அதற்கமைய, நீர்ப்பாசன வசதிகள் போதியளவு இல்லாத காரணத்தினால், சிறு போகத்தில் நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலப்பகுதிகள் மற்றும் இடைப்பட்ட காலத்தில் மேலதிக பயிராக பாசிப்பயிறு பயிர்ச் செய்கையை மேற்கொள்ள தேவையான விதைகளை பெற்றுக் கொள்ள நிதி உதவியை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கமாறு ஜனாதிபதி விவசாய அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.