எரி வாயு தானாக வெடிக்காது – ஜோன்ஸ்டன்!!
எரி வாயு தானாக வெடிக்காது.. இவற்றுக்குப் பின்னால் உள்ள நாசகாரர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.. ஆளும் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் ஏன் நீக்கப்படவில்லை என 21-01-2022 அன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளித்தார்.
கேஸ் நிறுவன தலைவரை ஜனாதிபதி நீக்கவில்லை. அவரே அந்த இடத்திற்குச் சென்று தலைவரை அதே பதவியில் வைத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஜனாதிபதியைக் குறை கூறுவது தவறு. ஜனாதிபதி ஒரு ஜனநாயக தலைவர். அவர் லங்காகமவை நேரில் சென்று பார்த்தார்.வீதிகளை அமைக்க முடிவு செய்தார். ஜனாதிபதி என்ற முறையில் பதவி விலகுவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் முழு அதிகாரமும் அவருக்கு உண்டு.
கேஸ் வெடிப்பு பற்றி விசாரணை நடத்த ஆரம்பத்திலே கோரிக்கை விடுத்தேன். இந்த எரிவாயு தன்னிச்சையாக வெடிக்கிறது என்பதை நான் ஏற்கவில்லை. ஆனால் இது கவனிக்க வேண்டிய ஒன்று. இதைப் பற்றித் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்த போது எங்களில் சிலர் சிரித்தார்கள்.
குண்டுகளுக்கு என்ன நடந்தது என்பதை இப்போது பார்க்கலாம். தேவாலயத்திற்குச் சென்று வெடிகுண்டுகளை வைக்கின்றார்கள். இப்போது யாரும் தலைமறைவானவரைக் கண்டுபிடிக்கச் சொல்லவில்லை. பிரதான சூத்திரதாரி யை கண்டுபிடிக்க வேண்டும். யாரிடம் இந்த வெடிகுண்டுகள் இருந்தன, யார் இதற்கு பின்னணியில் இருக்கிறார்கள்.இதில் யார் யார் ஈடுபட்டுள்ளனர் என்பதை எதிர்காலத்தில் அறியலாம்.
ஜனாதிபதி பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. ஜனாதிபதியாக அவர் சரியான முடிவுகளை எடுக்கிறார். அமைச்சர்கள் மற்றும் தலைவர்களை நியமிக்கவும் நீக்கவும் அவருக்கு முழு அதிகாரம் உள்ளது.
இந்த எரிவாயு வெடிப்பைப் பற்றி நான் விசாரணை நடத்த வேண்டும், நிச்சயமாக இந்த குழுவைப் பற்றி கண்டுபிடிக்க வேண்டும். தேவாலயத்தில் குண்டு வைத்து போன்று நாட்டின் தேசிய பாதுகாப்பை குழப்ப முயல்வது குறித்து கண்டறியுமாறு நான் ஜனாதிபதியிடம் கோருகின்றேன்.
ஊடக பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு