இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகையும் விடுதலை செய்ய வேண்டும்!! (வீடியோ)
தமிழக மீனவர்களின் படகை இங்கை அரசு ஏலம் விடுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றாத பட்சத்தில் எதிர்வருகின்ற 2ம் திகதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஓட்டர் ஐடி, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசின் ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்டவுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த ராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்யப்பட்டு கடற்படை முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 105 படகுகளை இலங்கை அரசு ஏலம் விடப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து இன்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில் இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 105 தமிழக படகை ஏலம் விடுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும், சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும், மேலும் கடந்த 19ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவரின் படகை இலங்கை கடற்படை மூட்டி மோதி மூழ்கடித்ததை விரைந்து மீட்பு குழுவினர் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை ராமேஸ்வரம் மீனவர்கள் நிறைவேற்றியுள்ளனர்
மேலும் வருகின்ற 2-ஆம் திகதிக்குள் மேலே குறிப்பிட்ட தீர்மானங்களை மத்திய அரசு நிறைவேற்றாத பட்சத்தில் வருகின்ற 2ம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அரசின் அனைத்து ஆவணங்களான ஆதார் கார்டு, ஓட்டர் ஐடி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து இந்திய பிரட்சை இல்லை என்று ஒப்படைக்கப் போவதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”