தடுப்பூசி போட்ட விமான பயணிகளுக்கு உடனடி கொரோனா பரிசோதனை ரத்து – பிரிட்டன் முடிவு…!!!
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 15,953,685 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 88,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 12,404,968 பேர் கொரானாவில் இருந்து
மீண்டுள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்துக்குள் நுழையும் உள்நாட்டு விமான பயணிகள் மற்றும் சர்வதேச பயணிகளில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு உடனடி கொரோனா பரிசோதனை செய்வதை ரத்துச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய இரண்டு நாள் அவகாசம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார். எனினும் எந்த தேதியில் இருந்து இது அமல்படுத்தப்படும் என்பதை அவர் அறிவிக்கவில்லை.
கடந்த மாதத்தை கொரோனா பரவல் விகிதம் குறைந்துள்ளதால் இங்கிலாந்தில் அனைத்து உள்நாட்டு கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதாக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் கடந்த வாரம் அறிவித்திருந்திருந்தார். அதன்படி
முன்னதாக இங்கிலாந்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் , புறப்படுவதற்கு முந்தைய சோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளை பிரிட்டன் பிரதமர் இந்த மாத தொடக்கத்தில் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.