;
Athirady Tamil News

பா.ஜனதா எம்.பி. கவுதம் காம்பீருக்கு கொரோனா பாதிப்பு…!

0

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா டெல்லி கிழக்கு தொகுதி எம்.பி.யுமான கவுதம் காம்பீர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து காம்பீர் வீட்டில் தனிமை படுத்திக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.