உ.பி.யில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பா.ஜ.க மந்திரியின் மகன்- தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…!!!!!
உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் அம்மாநில பா.ஜ.க. மந்திரியின் மகன் தேர்தலுக்காக வாக்களர்களுக்கு பணம் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உத்தரப்பிரதேச மந்திரியும் ஷிகார்பூர் சட்டப்பேரவை தொகுதியின், பா.ஜ.க. வேட்பாளருமான அனில் ஷர்மாவின் மகன் குஷ் சர்மா, ஒரு வாகனத்தில் வந்துக்கொண்டே வாக்காளர்களுக்கு 100 ரூபாய் பணத்தை விநியோகம் செய்து வந்தார்.
அவருக்கு பின்னணியில் டிரம்ஸ் வாத்தியமும் ஒலித்தப்பட்டி இருந்தது. இந்த வீடியோ குறித்து அம்மாநில தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன.
இதையடுத்து இந்த வீடியோ குறித்து மந்திரி அனில் ஷர்மா 24 மனி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பா.ஜ.க. தரப்பில், பணம் வாங்கியவர்கள் அனைவரும் இசைக் கலைஞர்கள். தேர்தல் பிரச்சாரத்திற்கு டிரம்ஸ் இசைக்க பணம் வழங்கப்பட்டது. அது வாக்காளர்களுக்கு கொடுத்த பணம் இல்லை என தெரிவித்துள்ளது.
இது குறித்து மந்திரிக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.