மின்சார உற்பத்திக்கு தண்ணீர் தரமாட்டோம் !!
எதிர்காலத்தில் இயற்கை காரணங்களால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறையும் பட்சத்தில் மின்சார உற்பத்திக்கான நீரை விநியோகிக்காமல் பயிர்ச்செய்கை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டியில் (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதைத் தெரிவித்தார்.
நீர் விநியோகத்தை நிர்வகிப்பது அவர்களின் பொறுப்பாகும் என்று கூறிய அமைச்சர், பயிர்ச்செய்கைக்கு தண்ணீர் வழங்கும் போது அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்கிறோம் என்றார்.
வரட்சியின் காரணமாக நீர்மட்டம் குறைந்தால் நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட மாட்டாது. ஏனெனில் விவசாயத் துறையைப் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பரிந்துரைகளை தாங்கள் பரிசீலிப்பதாக கூறிய அமைச்சர் சமல், தாங்கள் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதில்லை என்றும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட மாட்டாது, தேவைப்படும் போது வழங்கப்படும் என்றும் கூறினார்.