பாகிஸ்தானில் பீட்ஸா போல் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்படும் துப்பாக்கிகள்…!!!!
பாகிஸ்தானில் ஒரு தனிப்பட்ட நபர் சமூக வலைத்தளம், செல்போன் மூலம் டீலரை தொடர்பு கொண்டு எளிதாக துப்பாக்கிகள் வாங்கும் நிலை இருப்பதாக சாமா டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.
கராச்சியில் துப்பாக்கி வாங்கிய நபர் ஒருவர் இதுகுறித்து சாமா டி.வி.க்கு அளித்த பேட்டியில், ‘‘டீலர் மூலம் தொடர்பு கொண்டு துப்பாக்கி வேண்டும் என்று தெரிவித்தால், கைபர் பாக்துன்வா மாகாணத்தில் உள்ள தாரா அடம்கெல் பகுதியில் இருந்து பீட்ஸா போல் வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட்டது’’ எனத் தெரிவித்துள்ளளார்.
பெயர் சொல்ல விரும்பாத அந்த நபர் மேலும் கூறுகையில், டெலிவரி செய்வதற்கு முன் லைசென்ஸ் கூட கேட்பதில்லை. ஒட்டுமொத்த பேச்சுவார்த்தையும் போன் மூலமாகவே நடைபெறும். நான் முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் அனுப்பினேன். துப்பாக்கி டெலிவரி செய்தபின், நன்றாக பரிசோதித்து சரியாக வேலை செய்கிறது என்பதை உறுதி செய்தபின், மீதமுள்ள 28 ஆயிரம் ரூபாயை செலுத்தினேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்… தைவானுக்கு சீனா தொடர்ந்து அச்சுறுத்தல்
கராச்சியில் இரண்டு நெட்வொர்க் மூலமாக துப்பாக்கி விற்பனை நடைபெறுகிறது. முதலில் துப்பாக்கி விற்பனை செய்யும் டீலர். அதன்பின், டெலிவரி செய்யப்படும் குரூப் என இயங்குகிறது. 9எம்.எம். துப்பாக்கியில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி வரை விற்பனை செய்யப்படுகிறது.