மும்பை பங்குச்சந்தை: வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் சரிவு…!!
மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த வாரம் சரிந்த நிலையிலேயே காணப்பட்டது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவு இன்றும் நீடித்தது.
நேற்றுமுன்தினம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57,858.15 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 540 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் 57,317.38 புள்ளிகளுடன் தொடங்கியது. அதன்பின் வர்த்தகத்தில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டது.
குறைவாக 56,674.51 புள்ளிகளுடன் வர்த்தகமானது. அதிகபட்சமாக 57,317.38 வரத்தகமானது. காலை 10.00 மணி நிலவரப்படி மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் 56,752.49 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை சென்செக்ஸ் குறியீட்டு எண் 1,100 புள்ளிகள் குறைந்து வர்த்தகமானதால், முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர்.