வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கொரோனா தொற்று…!!
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினமும் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இன்று நான் கொரோனா பரிசோதனை செய்துள்ளேன். அதில் எனக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, சமீபத்தில் தொடர்பு கொண்ட அனைவரையும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.