ஏற்றுமதி வருமானம் 23% அதிகரிப்பு!!
2021 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி மூலம் இலங்கை 15.12 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது 2020 இல் ஈட்டிய 12.34 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட 23% அதிகமாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக பொருள்கள் ஏற்றுமதியில் ஈட்டப்படும் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எல்லையை தாண்டி 2021 ஆம் ஆண்டில் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளது.
இது 2021 ஆம் ஆண்டின் ஏற்றுமதி இலக்கை விட அதிகமாகும் எனவும் 2020 உடன் ஒப்பிடுகையில் 24% வளர்ச்சியாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, 2021 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மாதாந்திர வர்த்தக ஏற்றுமதி வருமானம் பில்லியன் டொலர் எல்லையை கடந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி ஊடாக 15.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டி எதிர்ப்பார்க்கப்பட்ட இலக்கை அடைந்தமை குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு விசேடமாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.