பண்டைய நாகரிகத்தைப் போன்று விவசாயம் அழிக்கப்பட்டுள்ளது !!
கலிங்க மன்னன் பண்டைய நாகரிகத்தை அழித்தைப் போன்று இந்த அரசாங்கம் விவசாய நாகரிகத்தை அழித்துள்ளதென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கண்டி கிளர்ச்சியின் போது, வெள்ளையர்கள் காய்க்கும் மரத்தை கூட அழித்தனர். அதேபோல் கலிங்க மன்னரின் காலத்தில் நாட்டின் பண்டைய நாகரிகம் அழிக்கப்பட்டது.அதேப்போல் இந்த அரசாங்கம் தற்போது விவசாய நாகரிகத்தை முற்றாக அழித்துள்ளது என்றார்.
தம்புள்ளையில் நேற்று (58) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
வெடிப்பு சம்பவங்களை நிறுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் கீழ், சமையல் எரிவாயு கூட வெடிப்பதாகத் தெரிவித்த அவர், அதுமாத்திரமல்ல திரவ உர போத்தல் கூட வெடிக்கிறது என்றார்.
அத்துடன் இறக்குமதி செய்யப்பட்டுள்ள திரவ உரம் பாரிய துர்நாற்றம் வீசுவதாகத் தெரிவித்த அவர், அந்த துர்நாற்றம் இன்னும் அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்துக்கும் தெரியவில்லை என்றார்.
எனவே, மக்களின் துன்பங்களை உணரும் தன்மை அரசாங்கத்திடம் இல்லை . விவசாயின் கண்ணீர், வேதனை, விவசாயியை வீழ்த்தி, கஷ்டப்படுத்தி தமது நண்பர்களுக்கு பணம் தேடும் வழியை உருவாக்கியது மட்டுமே இந்த அரசாங்கம் செய்து வேலையே தவிர, இந்த வருடங்களில் மகிழ்ச்சிகரமான தகவல் ஒன்றை கூட கூறவில்லை என்றார்.