சமூதாய மேம்பாட்டு துறையின் வன்னி பிராந்திய இணைப்பாளராக “பா.வினோத்” நியமிக்கப்பட்டார்.! (படங்கள்)
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் அமைச்சரவை அமைச்சராகவும், ஜீவன் தொண்டமான் அவர்கள் இராஜாங்க அமைச்சராகவும் பெறுப்பேற்றுள்ள “சமூதாய மேம்பாட்டு” துறையின் வன்னி தேர்தல் தொகுதியின் “இணைப்பாளராக” பாலச்சந்திரன்.வினோத் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமன கடிதங்களை இராஜாங்க அமைச்சர் “ஜீவன் தொண்டமான்” அவர்களால் யாழில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
வாழ்வாதார உதவிகளை வழங்குதல்,
கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்,
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உதவிகளை பெற்றுக்கொடுத்தல்,
பேரிடர் கால நிவாரணங்களை பெற்றுக்கொடுத்தல்,
மனிதவள மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்தால் என்பன இத் துறையின் பணியாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இது தொடர்பாக வினோத் அவர்களை வினவிய பொழுது இவ்வாறு தெரிவித்தார்.
மேற்குறிப்பிடப்பட்ட விடையங்கள் “வன்னி தேர்தல் தொகுதியில்” எங்கெல்லாம் தேவைப்படுகிறது என்பதினை அடையாளம்கண்டு அமைச்சர் மற்றும் அமைச்சங்களின் பார்வைக்கு கொண்டு செல்வதுடன் அதற்கான தீர்வை பெற்றுக்கொடுத்தல் எனது பணியாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
பெறுப்பேற்றுள்ள மக்களுக்கான இச் சேவையினை எவ்வித குறையுமின்றி சீரும் சிறப்புமாக செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
என் மீது நம்பிக்கை கொண்டு இச் சேவைக்கு என்னை தேர்ந்தெடுத்த இராஜாங்க அமைச்சர் “ஜீவன் தொண்டமான்” அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.