கேரளாவிற்கு சுற்றுலா வந்த போது போதை வாலிபர்களால் தாக்கப்பட்ட ரஷிய ஜோடி மன்னித்து விட்டதாக பேட்டி….!!
கேரள மாநிலம் கொச்சிக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
ரஷிய நாட்டில் இருந்து டேனியல் (வயது 42) அவரது பெண் தோழி கேத் (26) ஆகியோர் கொல்லம் பகுதிக்கு சுற்றுலா வந்தனர்.
அங்குள்ள படகு துறையில் ரஷிய ஜோடி சுற்றி பார்த்து கொண்டிருந்தனர். அவர்களுடன் டெல்லியை சேர்ந்த ஒரு ஜோடியும் இருந்தனர்.
அப்போது ஒரு கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் ரஷிய ஜோடியை மிரட்டியதோடு அவர்களை தாக்கவும் செய்தனர். அவர்களை படகு துறையில் இருந்தவர்கள் தட்டி கேட் டனர்.
அவர்களுடன் வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பற்றி அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் ரஷிய ஜோடியுடன் தகராறில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவல் தெரியவந்தது.
இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுபோதையில் அவர்கள் இந்த தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி ரஷிய ஜோடி கூறும்போது, இந்தியாவிற்கு நான் இதற்கு முன்பும் வந்துள்ளேன். கேரளாவுக்கு இப்போதுதான் வந்திருக்கிறேன்.
இங்குள்ள சுற்றுலா தலங்கள் மனதை மயக்குவதாக உள்ளது. இங்கு பரிமாறப்படும் உணவு வகைகளும் பிரமாதமாக இருக்கிறது. இங்கு எங்களுக்கு நடந்த சம்பவத்தை மறந்து விட்டேன். எங்களை தாக்கியவர்களையும் மன்னித்து விட்டேன். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இங்கு வருவேன். இவ்வாறு அவர்கள் கூறினர்.