;
Athirady Tamil News

மணமகன் மாலையை தூக்கி எறிந்ததாக திருமணத்தை நிறுத்திய மணமகள்…!!!

0

உத்தர பிரதேச மாநிலத்தின் ஆரையா மாவட்டத்தில் இருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. வட இந்தியாவில் திருமண சடங்குகள் பிரமாண்டமாக நடத்தப்படும். மருதாணி வைத்தல், மாலை மாற்றுதல் போன்ற சடங்குகள் நடத்தப்படும்.

அதன்படி திருமணம் செய்ய இருந்த மணமகன் மற்றும் மணமகளுக்கு தாலி கட்டுவதற்கு முன் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது மணமகன் மணமகள் மாலையை கழுத்தில் போட முடியாத வண்ணம் அடம்பிடிப்பார். அதேபோல் மணமகளும் அடம்பிடிப்பார். இவ்வாறு இருவரும் மறுப்பதை உறவினர்கள் வேடிக்கை பார்த்து ரசிப்பார்கள்.

அப்படி மாலை மாற்றும் சடங்கின்போது மணமகன் மாலையை தூக்கி எறிந்ததாக மகமகள் கோபித்துக்கொண்டு திருமணத்தை நிறுத்தினார். மணமகன் நான் மாலையை எறியவில்லை என்று தெரிவித்தாலும் அதை மணமகள் ஏற்கவில்லை. இதனால் இரு வீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. மணமகளிடம் சமாதானம் பேசியும் பலன் அளிக்கவில்லை.

இறுதியாக காவல்நிலையத்தை நாடினர். அவர்கள் பெண்ணிடம் சமாதானம் பேச, மணமகள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். அதன்பின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்தவர்கள் பரிசுகள் வழங்கி மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மணமகள் ஒருவர் ஏழு கட்ட திருமண சடங்கு முடிந்த நிலையில், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். மறுப்பு தெரிவிக் காரணம் என்ன? எனக் கேட்டபோது, கூலாக மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றார்.

ஏழு கட்ட சடங்குகள் முடிந்த பின்னர் திருமணத்திற்கு மறுத்தால் எப்படி? என சமாதானப்படுத்திய நிலையில் மணமகள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் திருமணம் நின்று போனது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.