போத்தல் குடிநீர் விலை வர்த்தமானி இரத்து !!
போத்தலில் அடைக்கப்பட்ட உள்ளூர் குடிநீரின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானியை இரத்து செய்து, புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதியன்று போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலே இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
2018 வர்த்தமானியின்படி, 350-499 மில்லிலீற்றர் வரையிலான குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலையாக 26 ரூபாயும் ஒரு லீற்றர் மற்றும் 1.5 லீற்றர்போத்தலின் விலை 50 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.