எலான் மஸ்க்கின் ஒற்றை வார்த்தையால் 100 பில்லியன் டாலர் அளவிற்கு குறைந்த ‘டெஸ்லா’ மதிப்பு…!!!!
டெஸ்லா எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க், டெஸ்லா இந்த வருடம் எலக்ட்ரிக் கார்களை வெளியிடாது. ஆட்களுக்குப் பதிலாக வேலைக்கு ரோபோக்களை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறோம் என்றார்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் இவ்வாறு கூறி மறுநாளே நியூயார்க் பங்குச்சந்தையில் டெஸ்லாவின் மதிப்பு 12 சதவீதம் குறைந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவிற்கு சரிந்துள்ளது.