குழந்தைகளை பாதிக்கக்கூடிய மற்றொரு தீவிர நோய்!!
நாட்டில் மீண்டும் கொவிட்-19 பரவியுள்ள நிலையில் குழந்தைகளை பாதிக்கக்கூடிய மற்றொரு தீவிர நோய் குறித்து கொழும்பு ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
“மிஸ்ஸி” என்ற நோய் ஏற்பட்டால் குழந்தைகள் இறக்க கூட நேரிடும் என கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இந்த நோய் மிகவும் தீவிரமாக இருக்கலாம் எனவும் இதனால் அனைத்து புலன்களும் செயலிழந்துவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் இந்த நோயின் அபாயத்தைக் குறைக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.