பெரும்போக நெற்செய்கையின் அறுவடைகள் ஆரம்பம்!!
மன்னார் மாவட்டத்தில் கடந்த வருட இறுதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்செய்கையின் அறுவடைகள் தற்போது ஆரம்பித்துள்ளது.
நாட்டில் இரசாயன உரம் தடை செய்யப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கையின் அறுவடை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் நெல் அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது
குறிப்பாக 30-40 மூடை நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்களில் 15-20 மூட்டைகளே கிடைப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் களை நாசினிகள் தடை செய்யப்பட்ட நிலையில் நெற்செய்கையில் பெறும் பகுதியில் புற்கள் மற்றும் முட் புதர்கள் நிறைந்து காணப்படுவது அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
மேலும் தனியார் நெற்செய்கை கொள்வனவுக்கு இதுவரை நிர்ணய விலை நிர்ணயிக்கப் படாமையினால் நாளுக்கு நாள் நெல்லின் விலை குறைவடைவதாகவும் விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர் .