;
Athirady Tamil News

கைப்பற்றிய இடத்திலேயே நாட்டை ஒப்படைக்கவும்!!

0

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள விடயங்கள் எதனையும் நிறைவேற்றாமல், நாட்டை கைப்பற்றிய இடத்துக்கு கொண்டு வந்து மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர்,

தற்போதைய பொருளாதார நிலையில் நாட்டு மக்களுக்கு உண்பதற்கும் குடிப்பதற்கும் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

எல்லா இடங்களிலும் வரிசைகள் காணப்படுகின்றன என்றும் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் முன்னர் எமது நாட்டில் நீர்த் தட்டுப்பாட்டாலேயே மின் தடை ஏற்படும் எனவும் தற்போது எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் தடைப்படும் முதல் சந்தர்ப்பம் என்றும் குறிப்பிட்டார்.

கட்டியெழுப்ப முடியாத நிலைக்கு நாடு சென்றுள்ளது என்று தெரிவித்த அவர், அடுத்த மூன்று ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக தெரிவிக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

நாட்டை தங்களிடம் ஒப்படைக்கும் போது தந்த இடத்திலேயே மீண்டும் ஒப்படைக்குமாறு இந்த அரசாங்கத்திடம் தான் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்டால், ஒரு கிலோ கிராம் அரிசியை 60 ரூபாய்கும் பருப்பை 80 ரூபாய்க்கும் 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் காஸ் சிலிண்டரை வழங்கும் காலம் மீண்டும் சாத்தியமாகும் எனவும் நாட்டை வழங்கும் போது அபிவிருத்தி செய்து வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.