சீன அரிசிக்கும் ஸ்டிக்கர் தேவை !!
சிகரெட் பக்கெட்டுகளில் காணப்படும் எச்சரிக்கை ஸ்டிக்கரைப் போன்று சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்புகளிலும் எச்சரிக்கை ஸ்டிக்கர் கட்டாயம் ஒட்டப்பட வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
இலங்கையை விட அதிகளவில் இரசாயன உரங்களைப் பயன்படுத்தும் நாடான சீனாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்தது நகைச்சுவையானது எனவும் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால், சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கும் என தெரிவித்தார்.
இரசாயன உரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் காய்கறிகள் மற்றும் அரிசியை உட்கொள்வதால் சிறுநீரக நோய்கள் ஏற்படும் அபாயம் இருந்தால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து அரிசி மூடைகளிலும் சிறுநீரக நோய்களின் அபாய ஸ்டிக்கர்களை அரசாங்கம் ஒட்ட வேண்டும் என்றார்.
இரசாயன உர பாவனையினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் காரணமாகவே சேதன உரங்களை அறிமுகப்படுத்துவதாக அரசாங்கம் கூறுவதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும் சீனாவில் அதிகளவான இரசாயன உரங்கள் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படுவதாகவும் இரசாயன உரங்கள் குறித்து கவலை தெரிவித்த மருத்துவர்கள் இப்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி குறித்தும் கவலை கொள்ள வேண்டும் என்றார்.