டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைத் இனங்காண விஷேட தேடுதல் நடவடிக்கை!!
டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைத் தேடி இன்று (31) ஹொரணையில் விசேட ட்ரோன் மூலம் விஷேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி ஏர் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலகவின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் செயல்பாட்டு அறை மற்றும் விமானப்படை இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.
ஹொரணை சுகாதார வைத்திய அதிகாரி, ஹொரண பொலிஸ் மற்றும் ஹொரண மாநகர சபை ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
ட்ரோன் கேமரா மூலம் நகரில் உள்ள கட்டிடங்கள் உட்பட பல டெங்கு பரவும் இடங்களை இதனூடாக கண்டறிய முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் குறித்த பகுதிகளுக்கு சென்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.