இந்த அரசின் நோக்க பற்றி கருத்து வௌியிட்ட ஜி.எல். பீரிஸ் !!
உள்நாட்டு பொறிமுறை மூலம் பிரச்சனையை தீர்ப்பதே இந்த அரசின் நோக்க என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
இம்முறை ஐ.நா சபையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர்கள் வினவிய போதுமேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இது இங்கே பல வருடமாக இடம்பெற்ற ஒரு உள்நாட்டுப் பிரச்சினை. உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை ஒரு அதிக பிரச்சினை உள்ள நாடும் இல்லை. அத்தோடு நாங்கள் ஏற்கனவே நடந்த பிரச்சினைக்காக நேரத்தையும் வீணடிக்க தேவையில்லை.
தற்போது இந்த கொரோனா என்னும் நோய்க்கு முகம் கொடுப்பதால் பல மில்லியன் கணக்கில் பணத்தை செலவழித்துள்ளோம். அதாவது தடுப்பூசி மற்றும் ஏனைய செயற்பாடுகளை முன்னெடுத்து எமது இலங்கையினை கொரோனா நோயில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றோம்.
அதோடு தற்போது உள்ள நிலைமையில் கொரோனா நிலைமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். எனவே, இலங்கையின் நிலைப்பாடு என்னவென்றால் உள்நாட்டு பொறிமுறை மூலம் நடந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது எமது நிலைப்பாடாக காணப்படுகின்றது.
தேசிய ஒற்றுமை ஒருமைப்பாடு என்பவற்றை நிலைநாட்டி உள்நாட்டு பொறிமுறை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தீர்வு வழங்குவதனை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் நமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ மிகவும் உறுதியாக உள்ளார்.
அதாவது பல்வேறுபட்ட முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார். இன ஒற்றுமை மற்றும் நாட்டில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்கு வருடங்களின் பின்னர் ஒரு நல்ல ஒரு சாதகமான நிலை தற்போதைய கோட்டபாய அரசிற்கு ஏற்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையில் ஒற்றுமை நல்லிணக்கம் ஏற்பட கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. அதோடு இது ஒரு முடிவல்ல ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கின்றது. ஒரு சிலர் கூறலாம் இது போதுமானதான விடயம் அல்ல என அதை ஏற்றுக்கொள்கின்றோம்.
ஆனால் அதனை தொடர்ந்து செய்வதற்கு காலம் தேவை தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தில் கூட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே 42 வருடங்களின் பின்னர் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுமாறு கூட யாரும் கூறவில்லை அது மாற்றியமைக்கப்படவும் இல்லை. ஆனால் தற்போதுள்ள கோத்தபாய அரசாங்கம் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தில் கூட மாற்றங்களை செய்துள்ளது எனவே அவ்வாறு ஒரு முன்னேற்றகரமான ஒரு நிலை இருக்கின்ற போது நாங்கள் ஐ.நா சபையில் ஜெனிவா கூட்டத்தில் நாங்கள் இந்த விடயங்களை எடுத்துரைக்கவுள்ளோம் என்றார்.