அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி…!!
செஞ்சி திருவண்ணாமலை சாலையில் தாங்கள்கரை அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது அந்த வழியாக சென்ற வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றதில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே ரத்தம் கொட்ட பரிதாபமாக இறந்து போனார் தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி அவர் யார் எந்த ஊர் எந்த வாகனம் மோதி மோதியது என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
பிரேதம் பிரேத பரிசோதனைக்காக அடையாளம் காண்பதற்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.