பிரேசில் நாட்டில் கனமழை: வெள்ளம்- நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலி…!!
பிரேசில் நாட்டில் தென்கிழக்கு மாநிலமான சாவ் பாவ்லாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
சாவ்பாவ்லா மாநிலத்தில் மழையினால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 9 பேர் காயம் அடைந்துள்ளனர். 5 பேர் மாயமாகி உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அங்கு மிகவும் கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 7 பேர் குழந்தைகள் ஆவர். இது குறித்து அம்மாநிலத்தின் கவர்னர் ஜோவ் டோரியோ தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சாவ் பாவ்லா மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மிகுந்த வருத்தத்துடன் பார்வையிட்டு வருகிறேன். உயிரிழந்த 18 பேரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.