3 நாள் காய்ச்சல்; பல்கலைக்கழக மாணவி பலி!!
3 நாள் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி நேற்றுக் காலை உயிரிழந்துள்ளதார்
இணுவில் மேற்கைச் சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது – 23) என்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”