இந்திய மீனவர்கள் 43 பேருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணம் சிறையிலிருந்த இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டபோதும் கொரோனா காரணமாக தாயகம் திரும்புவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 மற்றும் 21ஆம் திகதிகளில் 8 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களும் கடந்த 25 ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விமானம் மூலம் அனுப்பி வைக்க சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு விமானப்பயணம் மேற்கொள்வதற்காக அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்தபோது 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனால் கொரோனா காலத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவுபெற்ற பின்பே தமிழ்நாட்டிற்கு பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”