தனிமையில் இருந்த வீடியோ இணையதளத்தில் பதிவேற்றம் – அதிர்ச்சி அடைந்த பெங்களூரு ஜோடி…!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஆஸ்டின் நகர் பகுதியில் வசிக்கும் 25 வயது இளைஞர் ஒருவர் பிபிஓ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தனது காதலியுடன் பெங்களூருவில் இருக்கும் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 21ம் தேதி அந்த இளைஞர் சைபர்செல் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது காதலியும் சில வாரங்களுக்கு முன் பெங்களூருவில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், அதை வீடியோ பதிவுசெய்து சிலர் ஆபாச இணைய தளத்தில் அப்லோட் செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அந்த வீடியோவில் தங்களின் முகம் மறைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் இருக்கும் நபரின் மார்பு பகுதியில் உள்ள அடையாளத்தை வைத்து, அந்த இளைஞர் அது தாம் தான் என புகார் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.