அமெரிக்காவில் 5 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்…!!
உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருசில தடுப்பு மருந்துகளை தவிர பெரும்பாலான தடுப்பு மருந்துகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன. இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் போடப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. முன்பைவிட வேகமாக பரவும் தன்மையுடன் உருமாறிய கொரோனா இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் பல்வேறு நாடுகள் தடுப்பூசியின் 3-வது டோசை (பூஸ்டர் டோஸ்) மக்களுக்கு செலுத்த முடிவு செய்தனர்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குடிமக்களுக்கு பூஸ்டர் டோசை செலுத்தும் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டன.
இந்நிலையில், அமெரிக்காவில் 5 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி பெற அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனத்திடம் பைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.