47 பில்லியன் ரூபாய் பணம் குறித்து சமுர்த்தி விளக்கம்!!
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவுக்கான சமுர்த்தி நிதியினை மீள நிரப்பு திரைச்சேறி தவறியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
5,000 ரூபாய் கொடுப்பனவுக்காக 47 பில்லியன் ரூபாய் செலவழித்த சம்பவம் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி இதனை தெரிவித்தார்.
இந்த பணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கு திறைசேரி நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதிக்குள் சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஏறத்தாழ 8 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த வருடமும் தவணை முறையில் பணத்தை செலுத்துவதற்கான வழிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி மேலும் தெரிவித்தார்.