;
Athirady Tamil News

யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே!!

0

யாழ் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் தொடர்பில் பொதுமக்கள் ஏதேனும் முறைப்பாடுகளை ஊடகவியலாளர்களுக்கு தெரியப்படுத்தினால் அது தொடர்பில் என் நேரமும் தன்னைத் தொடர்பு கொள்ள முடியும் என யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே தெரிவித்தார்.

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சினேக பூர்வமாக ஊடகவியலாளர்களை சந்தித்த போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் யாழ் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

யாழ் மாவட்டத்தில் உள்ள சில பொலிஸ் நிலையங்களில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முற்படும்போது அவற்றை முறைப்பாட்டு புத்தகத்தில் பதிவு செய்யாமல் சாதாரண புத்தகம் ஒன்றில் பதிவு செய்வது.

முறைப்பாடு பதிவு செய்யும்போது முறைப்பாட்டாளர் கூறிய விடயங்களுக்கு மேலதிகமாக சில விடயங்களை முறைப்பாட்டு புத்தகத்தில் சேர்ப்பது தொடர்பில் மாவட்ட பொலிஸ் அதிபருக்கு கூறப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரதிப் பொலிஸ் மா அதிபரும் முறைப்பாட்டாளர் தான் வழங்கிய விடயங்கள் அனைத்தும் முறைப்பாட்டு புத்தகத்தில் இருக்கிறதா என்பதை சரியாக வாசித்தபின் கையெழுத்திட முடியும்.

அவ்வாறு முறைப்பாடு புத்தகத்தில் இடம் பெறவில்லை அதில் கையெழுத்து விட வேண்டிய தேவையில்லை அது தொடர்பில் குறித்த பொலிஸ் நிலையத்தில் அல்லது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரமுடியும்.

பொலிசார் முறைப்பாடுகளை ஏற்கும் போது முறைப்பாட்டுக்கென வழங்கப்பட்ட புத்தகத்திலேயே எழுதவேண்டும்.

பொது மக்களுக்கு சேவையாற்றும் நோக்கிலேயே பொலிசார் தமது கடமைகளை மேற்கொள்கின்ற நிலையில் சில பொலிசார் தவறு விடுகிறார்கள்.

அவ்வாறு தவறுகள் விடும் சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் அவற்றை செய்தியாக பிரசுரிக்கின்றன அதில் தவறில்லை.

நான் யாழ் மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மா அதிபராக இருக்கின்ற நிலையில் யாழ் மாவட்ட பொலிசாரின் தவறான செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் என்னிடம் நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை எந்த நேரத்திலும் வழங்கலாம்.

பொலிசார் தொடர்பில் பொதுமக்களின் முறைப்பாடுகள் பொலிசாருக்கு கிடைப்பதைவிட ஊடகவியலாளர்களுக்கேஅதிகம் கிடைக்கிறது.

ஆகவே பொலிஸ் திணைக்களத்தால் வழங்கப்பட்ட வளங்களைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு எம்மால் முடிந்த வரை சேவையை வழங்குவதற்கு தயாராக உள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.