பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராகவும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதேச செயலகத்தின் இரண்டு வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக அமர்ந்திருந்து மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திந்தனர்.
இதனால் பிரதேச செயலகத்தின் இன்றைய செயற்பாடுகள் யாவும் பாதிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியையும் மறித்து வீதியில் இந்திய மீனவர்களால் அறுத்து நாசமாக்கப்பட்ட வலைகளையும் போட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்ததோடு பாடசாலை மாணவர்கள் மாத்திரம் வீதியினால் செல்லுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலீஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

