இன்று 1,156 பேருக்கு கொவிட் தொற்று !!

நாட்டில் இன்றைய தினமும் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையின் படி இன்றைய தினத்தில் மாத்திரம் 1,156 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 5 பேர் வௌிநாட்டில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கான மேலும் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 15,492 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 471 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 579,320 ஆக அதிகரித்துள்ளது.