;
Athirady Tamil News

200 கிலோ ஹெரோயினை கடலில் வீசிய கடத்தல்காரர்கள்!!

0

இலங்கைக்கு ஈரானில் இருந்து கடல்வழியாக கப்பல் ஒன்றில் 200 கிலோ போதை பொருள் கடத்தி வந்த 9 ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்களை இலங்கை ஈரான் கடல் எல்லைப்பகுதில் வைத்து கைது செய்து கொழும்பு கடற்படை தளத்திற்கு இன்று (3) கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோதவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வாவின் பணிப்புரைக்கமைய மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவிலன் வழிகாட்டலில் மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோத தலைமையிலான பொலஸ் குழுவினர் கடற்படையுடன் இணைந்து குறித்த கடல் பரப்பில் சுமார் 15 தினங்களுக்கு மேலாக இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த கடல்பரப்பில் ஈரானில் இருந்து 200 கிலோக்கிராம் போதை பொருளை கடத்திவந்த கப்பலை கடலில் வைத்து மறித்துபோது கப்பலில் இருந்த சுமார் சுமார் 200 கிலோ போதை பொருளை கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி போட்டுள்ள நிலையில் கடத்தல்காரர் 9 பேரை கைது செய்ததுடன் அவர்கள் பாவனைக்காக வைத்திருந்த போதை பொருளை மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்தவர்களையும் கப்பலையும் இன்று அதிகாலை கொழும்பு கடற்படை முகாமிற்கு கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட கடத்தல் காரர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.