ரஷ்யாவுடனான பதற்றம் காரணமாக இந்தியா உறவு பாதிக்காது – அமெரிக்கா உறுதி…!!!
ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தின்போது உக்ரைன் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பதில் அளிப்பதை இரண்டுமுறை தவிர்த்து விட்டார். இந்நிலையில் அமெரிக்க வெளியறவுத்துறை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைசிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய அவர், இந்த குறிப்பிட்ட பிரச்சினையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிலைப்பாட்டை விவாதிக்க எங்களது தோழமை நாடான இந்தியாவிடமே இதை விட்டு விடுகிறேன் என்று கூறினார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்பான எங்களின் கவலைகள் குறித்து, நாங்கள் இந்தியா உள்பட உலகெங்கிலும் பல்வேறு நாடுகளுடன் நாங்கள் தொடர்பில் இருப்பதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு அந்த சுற்றுப்புறத்திற்கு அப்பால் பாதுகாப்பு சூழலுக்கு தாக்கங்களை ஏற்படுத்தும். ரஷ்யாவுடனான தற்போதைய பதட்டங்களால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சொந்த தகுதியில் உள்ளது. இவ்வாறு அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ்