திருநெல்வேலி சந்தையில் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது!!
திருநெல்வேலி சந்தையில் வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்களிடம் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி சந்தையில் வகுப்பு (மூடை தூக்குதல்)வேலை செய்து வரும் நபர் ஒருவர், வியாபாரிகள் , நுகர்வோர்களிடம் உங்கள் மூடைகளை தூக்கி வருவதாக கூறி மூடைகளை தூக்கி செல்லும் போது , அவற்றில் இருந்து பொருட்களை திருடுதல் , அதிக பணத்தினை மிரட்டி பெறுதல் , மூடைகளை வாகனத்தில் ஏற்றிவிடுவதாக கூறி மூடைகளை தூக்கிக்கொண்டு தலைமறைவாகுதல் போன்ற செயல்களில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபையிடமும் , கோப்பாய் பொலிஸாரிடமும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியான முறைப்பாடுகளை செய்து வந்திருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் காலை கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த நபர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து அந்நபரினை கைது செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”