பசிபிக் பெருங்கடலில் விழ போகுது சர்வதேச விண்வெளி நிலையம்…!!!!!
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தை வடிவமைத்தன.
1998 ஆண்டு பூமியின் சுற்று வட்டப் பாதையில் அது செலுத்தப்பட்டது.சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இதுவரை அமெரிக்கா, ரஷியா உள்பட 15 நாடுகளுக்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் சென்று தங்கி ஆய்வுகளை நடத்தி விட்டு திரும்பி வந்துள்ளனர்.
தொடக்கத்தில் இந்த நிலையம், 15 ஆண்டுகள் வரை இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தின் செயல்பாடு 2031 ஆண்டுடன் நிறைவு பெறும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
இதையடுத்து அதை பூமிக்கு திரும்ப பெறும் நடவடிக்கை குறித்து நாசா ஆய்வு செய்து வருகிறது. 2031 ஜனவரியில் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவது குறித்து விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
பூமிக்கு திரும்பும் சர்வதேச விண்வெளி நிலையம், பாயிண்ட் நெமோ எனப்படும் தெற்கு பசிபிக் பெருங்கடலில் மக்கள் வசிக்காத பகுதியில் கடலில் மூழ்கடிக்கப்படும் என்று நாசா தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வினாடிக்கு ஐந்து மைல்கள் என்ற வேகத்தில் பயணிக்கும் சர்வதேச விண்வளி நிலையம் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமியை மேற்பரப்பில் இருந்து 400 கிமீ தொலைவில் சுற்றி வருகிறது.