;
Athirady Tamil News

அரசாங்கத்தினால் 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட நெல்!!

0

அம்பாறை மாவட்டத்தில் பெரும் போகத்தின் அரச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ நாட்டரிசி நெல் 90 ரூபாவிற்கும் ஒரு கிலோ சம்பா நெல்லினை 92 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதற்கு இன்று (05) நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அரசாங்கம் அறிவித்த 75 ரூபாய் உத்தரவாத விலையை விட அதிகமாக நெல் சந்தைப்படுத்தல் சபையினால் இவ்வாறு நெல் கொள்வனவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் 2021/2022 பெரும் போக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை கண்காணிப்பதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் நீல் டி அல்விஸ் மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் ஆகியோர் இன்று சம்மாந்துறை நெல் சந்தைப்படுத்தல் சபை களஞ்சிய வளாகத்திற்கு விஜயம் செய்தனர்.

அதன்படி தரமான ஒரு கிலோ கீரி சம்பா நெல் ரூ.95க்கும், சம்பா நெல் ஒரு கிலோ ரூ.92க்கும், நாட்டரிசி நெல் ஒரு கிலோ ரூ.90க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.

இதன்படி, அரசினால் அறிவிக்கப்பட்ட 75 ரூபா உத்தரவாத விலையை விட அதிகமான நெல் கொள்வனவுகளை நெல் சந்தைப்படுத்தல் சபை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, நாளை (06) முதல் ச.தொ.ச ஊடாக 998 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

துறைமுகத்தில் 500க்கும் மேற்பட்ட அரிசி கொள்கலன்கள் சிக்கியுள்ளன. அடுத்த வாரத்தில் இருந்து இதுபோன்ற அத்தியாவசிய கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.