சேதன பசளை உற்பத்தி செய்வதற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)
யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் வெளியில் திண்மக்கழிவுகளை கொண்டு சேதன பசளை உற்பத்தி செய்வதற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கல்லூண்டாய் வெளியில் திண்மகழிவுகளை அகற்ற பிரதேச சபைக்கு வழங்கப்பெற்ற10ஏக்கர் நிலப்பரப்பில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் திண்மக்கழிவு முகாமைத்துவம் செய்து சேதன பசளை உற்பத்தி நிலையத்தின் அமைக்கப்படவுள்ளது.
குறித்த பிரதேச சபையால் ஏற்கனவே கல்லூண்டாய் தரிசு நிலத்தில் மண் நிரப்பப்பட்டு சேதன பசளை உருவாக்குவதற்கான நிலையம் அமைக்கப்பெற்று வடமாகாணத்தில் குறித்த சேதன பசளை நிலையம் முண்ணணி வகித்து வரும் நிலையில் இன்று மேலுமொரு நிலையத்திற்கு ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இத்திண்மக் கழிவுகளை தரம்பிரிக்கும் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனையடுத்து ஏற்கனவே அமைக்கப்பெற்ற சேதன பசளை நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சேதன பசளைகளும் இயந்திர தொகுதிகளும் பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசனால் விருந்தினர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார், சண்டிலிப்பாய் கமநல பெரும்போக உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலர், பிரதேச சபையின் செயலாளர், சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”