தடுப்பூசி கட்டாயத்திற்கு எதிர்ப்பு: கனடா பாணியில் நியூசிலாந்தில் போராட்டத்தை தொடங்கிய டிரக் டிரைவர்கள்…!!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
சில நாடுகளில் சிறார்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி ஒன்றே கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க வழி என பெரும்பாலான நாடுகள் கருதுகின்றன. இதனால் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.
இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கட்டாயம் என்பது எங்களது தனிமனித சுதந்திரம் பாதிக்கிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உச்சக்கட்டமாக கனடாவில் லாரி டிரைவர் முக்கியமான தெருக்களில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது அந்நாட்டு பிரதமருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அவர் ரகசிய இடத்தில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. அவசர பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நியூசிலாந்திலும் கட்டாயம் தடுப்பூசி நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிரக் டிரைவர்கள் பாராளுமன்ற வீதிகளில் டிரக்குகளை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டிரக்
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகள் நடைமுறைப்படுத்திய நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. கொரோனா பாதிப்பு அதிரிகரிப்பு காரணமாக அந்நாட்டு பிரதமர் தனது திருமணத்தை ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்தில் 96 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டபோதிலும், கொரோனா அச்சத்தால் கடும் விதிமுறைகளை கடைபிடித்து வருகிறார்கள்.
இதனால் டிரக் டிரைவர்கள் எங்களது சுதந்திரத்தை எங்களிடம் கொடுங்கள், ‘வற்புறுத்தல்’ சம்மதம் அல்ல என கோஷம் எழுப்பினர்.