;
Athirady Tamil News

அடுத்த திரிபு ரொம்ப தீவிரம்: WHO எச்சரிக்கை !!

0

உலகம் முழுவதும் கொரோனா பரவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, மக்களின் இயல்பு வாழ்க்கையை குலைத்து வருகிறது. கொரோனா வைரஸுக்கு முடிவே இல்லையா என்ற அளவிற்கு அதன் திரிபு தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது.

கடைசியாக கொரோனாவின் திரிபு வகையான ஒமிக்ரான் வைரஸுடன் கொரோனா திரிபு நின்றுவிடும் என்று கருத்தப்பட்டது. ஆனால் ஒமிக்ரானை தொடர்ந்து கொரோனா வைரஸ் திரிபு ஏற்படும் என்று தற்போது உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வு பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் வெளியிட்டுள்ள தகவலின் படி, இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் தொடர வேண்டி இருக்கும், கொரோனா திரிபுகளில் ஒமைக்ரான் கடையாக இருக்காது . சில திரிபுகள் மக்களை தாக்க வாய்ப்புள்ளது. என்று கூறினார்.

அத்துடன் கொரோனாவின் அடுத்த திரிபு ஒமைக்ரானைவிட வேகமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும், அதற்கு பிறகும் சில திரிபுகள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அடுத்தடுத்த திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத் திறன் குறையக் கூடும் என்றும் ஆனாலும் நோய்த் தொற்று ஆபத்தையும், உயிரிழப்பையும் தடுப்பூசி பெருமளவு தடுக்கும் என்றும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.